About

புதிய ஜனநாயகக் கட்சி 1978ம் ஆண்டு இலங்கைக் கம்யூனிஸ்ற் கட்சி (இடது) என்ற பெயரில் நிறுவப்பட்டது. 1943ம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கைக் கம்யூனிஸ்ற் கட்சியின் மாக்ஸிய-லெனினியப் பாரம்பரியத்தின் உண்மையான வாரிசான இக் கட்சி, தனது தற்போதைய பெயரை 1991ம் ஆண்டு நடந்த தனது இரண்டாவது தேசிய மாநாட்டில் ஏற்றுக்கொண்டது. 1964ம் ஆண்டில், பாராளுமன்றப் பாதையை ஏற்ற திரிபுவாதிகளுடன் ஏற்பட்ட பிளவை அடுத்து, மாக்ஸிய-லெனினியக் கொள்கையையும் நடைமுறையையும் தற்காத்துப் போராடிய மாக்ஸிய-லெனினியவாதிகட்குக் காலஞ்சென்ற தோழர் சண்முகதாசன் தலைமை தாங்கினார். முக்கியமான தேசியப் பிரச்சனைகள் பற்றிய நிலைப்பாடு தொடர்பான விவாதங்களை அடுத்துப் புதிய ஜனநாயகக் கட்சி அதன் நிறுவக பொதுச் செயலாளர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் தலைமையில் 1978ம் ஆண்டு நிறுவப்பட்டது.

புதிய ஜனநாயகக் கட்சி, மாக்சிசம்-லெனினிசம்-மாஓ சேதுங் சிந்தனையைத் தனது வழிகாட்டியாக ஏற்றிப் பிடித்துள்ளது. இலங்கைச் சமுதாயத்தின் பிரதான முரண்பாடு தேசிய இனப் பிரச்சிiனையே என அடையாளங் கண்டு, ஏகாதிபத்தியத்திற்கும் பிராந்திய மேலாதிக்கத்திற்கும் எதிராகவும் பேரினவாத, உள்ளுர் பிற்போக்குச் சக்திகட்கு எதிராகவும் தனது தளராத போராட்டத்தில் அது உறுதியாகச் செயற்பட்டு வந்துள்ளது.
புதிய ஜனநாயகக் கட்சி “புதிய பூமி” எனும் மாதாந்த அரசியல் ஏட்டைத் தமிழிலும் ” New Democracy”  எனும் மும்மாதத் தத்துவார்த்த ஏட்டை ஆங்கிலத்திலும் “செம்பதாகை” எனும் மும்மாதத் தத்துவார்த்த இணையத்தள ஏட்டைத் தமிழிலும் வெளியிடுகிறது. வெளியீடுகள் மூன்றையும் http://ndpsl.org, http://ndpsl.com  எனும் இணையத்தளங்களிற் பார்வையிடலாம்.

Comments are closed.