ஜோஸெ மரியா ஸிஸொன்*
மார்கழியில் என் சிறைக்கூண்டை
நள்ளிரவில் ஒரு உறைகுளிர் அறையோடும்
பகலில் ஒரு வெதுப்பகத்துடனும்
ஒப்பிடுவேன்.
இப்போது வெய்யிற்காலம் என்பதால்
இதை நரகத்தோடு ஒப்பிடுகிறேன்.
எனினும் இதன் சிறிய அளவு கருதி
இதை ஒரு உலையோடு ஒப்பிடுகிறேன்.
இது ஒரு சீறும் உலை:
எஃகைப் பதனிடுகிறது.
இது ஆறுதல் தரும் ஒரு உவமேயம்.
[*ஜோஸெ மரியா ஸிஸொன் பிலிப்பின்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் முக்கியமான கொள்கை வகுப்பாளருமாக இருந்து, பல ஆண்டுகளாக நாடுமீள இயலாத நிலையில், ஒல்லாந்தில் பிலிப்பின்ஸ் தேசிய ஜனநாயக முன்னணியின் ஆலோசகராகச் செயற்படுகிறார்.]
(நன்றி: மறப்பதற்கு அழைப்பு
தேசிய கலை இலக்கியப் பேரவை 1999)